விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்

புதுடெல்லி: டெல்லி உட்பட 3 விமான நிலையத்தில் பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் நுழையும் போது பயணிகளின் அடையாளத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அடையாள அட்டை மற்றும் விமான டிக்கெட்டை காண்பித்த பின்னர்தான் பயணிகள் உள்ளே நுழைய முடியும். இந்நிலையில், பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கும் டிஜி யாத்ரா என்ற மின்னணு முறையை டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் நேற்று மத்திய அரசு துவங்கியது. இதன்படி, டிஜி யாத்ரா ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்தவர்கள், தங்கள் போர்டிங் பாசை விமான நிலைய வாயிலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, அங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா உதவியுடன் அவரது முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் கணினி உறுதி செய்யும். அதை தொடர்ந்து அந்த பயணி விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார். பாதுகாப்பு சோதனை விமானம் ஏறும் நுைழவு வாயில் பகுதி யிலும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த டிஜி யாத்ரா திட்டம் ஐதராபாத், கொல்கத்தா , புனே மற்றும் விஜயவாடா ஆகிய விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: