ரஷ்ய மொழியில் புஷ்பா வெளியாகிறது

ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற ‘புஷ்பா: தி ரைஸ்’ என்ற படத்தின் ரஷ்ய மொழி டிரைலர் அங்கு வெளியிடப்பட்டது. இதில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பஹத் பாசில் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ  பிரசாத் இசை அமைத்திருந்தார். இப்படம் வரும் 8ம் தேதி ரஷ்ய மொழியில் வெளியாகிறது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நாளை நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படுகிறது. ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெறும் 5வது இந்திய திரைப்பட விழாவின் தொடக்க நாளிலும் ‘புஷ்பா: தி ரைஸ்’  படம் திரையிடப்படுகிறது.

Related Stories: