சர்வதேச தீவிரவாதியான என்னுடைய தந்தையின் உடலை கடலில் எறிந்ததை நம்பவில்லை: ஒசாமா பின்லேடனின் மகன் பரபரப்பு பேட்டி

நியூயார்க்: சர்வதேச தீவிரவாதியான என்னுடைய தந்தையின் உடலை அமெரிக்க படைகள் கடலில் எறிந்ததாக கூறப்படுவதை நான் நம்பவில்லை என்று ஒசாமா பின்லேடனின் மகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடனின் 4 மகன்களில் ஒருவரான உமர் பின்லேடன் (41), தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாகவே, எனது தந்தையிடம் தீவிரவாத கொள்கையால் அவரிடம் இருந்து விலகிவிட்டேன்.

ஆனால் அவர் தனது தீவிரவாத அமைப்பிற்கு தலைமை ஏற்று நடத்த அறிவுறுத்தினார். ஆனால் அதனை ஏற்காததால், அவர் வருத்தப்பட்டார். எனக்கு 15 வயது இருக்கும் போது, எனது தந்தையுடன்தான் இருந்தேன். அப்போதே ஏகே 47 துப்பாக்கிகளை பயன்படுத்தும் நுட்பத்தை கற்றேன். எனது தந்தையின் உதவியாளர்கள், எதிரிகளின் இலக்காக எனது செல்ல நாயை குறிவைத்து கொன்றனர். எனது தந்தையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்; எனது வாழ்நாள் முழுவதும் நாடுவிட்டு நாடு சென்றேன். எந்த நாட்டிலும் நிரந்தரமாக குடியேறவில்லை.

குறைந்த பட்சம் தற்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். அமெரிக்கப் படைகள் என் தந்தையை என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை; அவர்கள் அவரை கடலில் எறிந்துவிட்டதாக சொன்னார்கள்; ஆனால் நான் அதை நம்பவில்லை. கடைசி நேரத்திலும் கூட எனது தந்தையின் உடலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வழங்கவில்லை’ என்று கூறினார்.

Related Stories: