பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த 2018ம் ஆண்டு  வியாசர்பாடி சர்மா நகர் எஸ்ஏ.காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (21) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும்  காதலித்து வந்தோம். ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாதபோது என்னை அங்கு வரவழைத்து  தாலி கட்டினார். இதன்பின்னர் கோவளம் பீச்சுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து பலமுறை உடலுறவு கொண்டார். இதன்பிறகு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

எனவே பார்த்திபனிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பார்த்திபனுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதும் இதன்காரணமாக தான் காதலித்துவந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று பார்த்திபன் கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை பார்த்திபனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு பார்த்திபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: