பீகார், டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 6 பெண்களை மணந்த ஆர்கெஸ்ட்ரா பாடகர் சிக்கினார்: ரயில் நிலையத்தில் கையும் களவுமாக பிடித்த உறவினர்

பாட்னா: பீகார், டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த 6 ெபண்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்திய ஆர்கெஸ்ட்ரா பாடகரை அவரது உறவினர்கள் ரயில் நிலையத்தில் கையும் களவுமாக பிடித்தனர். பீகார் மாநிலம் பர்ஹத் அடுத்த ஜவதாரி கிராமத்தை சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா குழு பாடகர் கணேஷ் தாசுக்கும், மஞ்சு என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணேஷ் தாஸ், தனது குடும்பத்தை விட்டுவிட்டு பல மாநிலங்களுக்கு சுற்றித் திரிந்து வந்தார்.

வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அதனால் கணேஷ் தாசை பல இடங்களில் உறவினர்கள் தேடினர். இந்நிலையில் மஞ்சுவின் சகோதரர் விகாஸ், கொல்கத்தா செல்வதற்காக ஜமுய் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது தனது சகோதரியின் கணவரான கணேஷ் தாஸ், வேறுறொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஜமுஸ் ஸ்டேஷனுக்கு வந்து, கணேஷ் தாஸ் மற்றும் அவருடன் வந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.

அதன்பின் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கணேஷ் தாசிடம் விசாரிக்கையில், அவருக்கு இதுவரை தான் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 6 பெண்களை  திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டார். ஆர்கெஸ்ட்ராவில் பாடுவதற்காக செல்லும் இடங்களில் எல்லாம், ஒவ்வொரு பெண்ணையும் தன்வயப்படுத்தி திருமணம் செய்து கொண்டு ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளார்.

சீனாவேரியா, சுந்தர்தாண்ட், ராஞ்சி, சங்க்ராம்பூர், டெல்லி, தியோகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பெண்களை மணந்த கணேஷ் தாசுக்கு, இரண்டு மனைவிகள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இதுவரை புகார்கள் ஏதும் அளிக்கப்படாததால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகின்ேறாம்’ என்றனர்.

Related Stories: