ஒர்க் ப்ரம் ஹோமின் அடுத்த லெவல்; மணமேடையிலும் வேலை லேப்டாப்புடன் மணமகன்

கொல்கத்தா: கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யும் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ பிரபலமாகி விட்டது. ஐடி துறையில் பணியாற்றும் பலரும் இன்னமும் ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்து வெளிவரவில்லை. அலுவலகத்திற்கு சென்றால் கூட நமது பணி நேரம் 8 மணி நேரம் தான். ஆனால் ஒர்க் ப்ரம் ஹோம் என்ற பெயரில் வேலை செய்வதற்கு என்று எந்த நேர காலமும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இந்நிலையில், ஒர்க் ப்ரம் ஹோமின் அடுத்த கட்டம் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது. மணமகன் ஒருவர் மணமேடையிலும் பிஸியாக லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, இரண்டு பெரியவர்கள் அவருக்கு ஆசிர்வதிக்கிறார்கள். ‘கொல்கத்தா இன்ஸ்டாகிராமர்ஸ்’ என்ற ஐடியில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம், உண்மையாக நடந்த சம்பவமாக என்பது தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளத்தில் இப்புகைப்படம் வைரலாகி உள்ளது.

Related Stories: