சொத்து, ஓய்வூதியம் கேட்டுமிரட்டும் பெண் இன்ஸ்பெக்டர்; டிஆர்ஓவிடம் தந்தை புகார்

வேலூர்:  வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். கூட்டத்தில், வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ பிச்சாண்டி(72) என்பவர், அளித்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான், 35 ஆண்டுகள் காவலராக பணியாற்றி எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்று கடந்த 2009ல் ஓய்வு பெற்றேன்.  2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகனுடன் வசித்து வருகிறேன்.

எனது மூத்த மகள் விஜயலட்சுமி வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார். அவர் எனக்கும், எனது மனைவிக்கும் எவ்வித செலவுக்கும் பணம் தருவதில்லை.  வாரத்திற்கு ஒரு தடவை என் வீட்டிற்கு வந்து, சொத்தை பிரித்து கொடு, பென்சன் பணத்தை பிரித்து கொடு என்று சண்டையிட்டு, துன்புறுத்துகிறார். எனது மகள் விஜயலட்சுமியை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தால், நானும், என் மனைவியும் கடைசி காலத்தில் நிம்மதியாக இருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: