அடுத்த வீடியோ லீக்; அமைச்சர் சத்யேந்தர் அறையில் சிறை கண்காணிப்பாளர் சந்திப்பு: சமூக வலைத்தளங்களில் வைரல்

புதுடெல்லி: சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினை திகார் சிறை கண்காணிப்பாளர் சந்திப்பது போன்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வீடியோவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் சத்யேந்தர் ஜெயினை மசாஜ் செய்வது, அடுத்த வீடியோவில் சிறப்பு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து திகார் சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த அஜித் குமார் சஸ்பெண்ட செய்யப்பட்டார்.

இந்நிலையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டெல்லி பாஜ ஊடக துறை தலைவர் ஹரிஷ் குரானா நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சஸ்பெண்ட செய்யப்பட்ட அஜித் குமார் சிறையில் இருக்கும் சத்யேந்தர்  ஜெயினை சந்தித்து பேசுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக, ஷரிஷ் குரானா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘நேர்மையான அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் புதிய வீடியோவைப் பாருங்கள். சிறைத்துறை அமைச்சரின் அறையில் இரவு 8 மணிக்கு திகார் சிறை கண்காணிப்பாளர் ஆஜராகிறார்’’ என்று அதில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: