சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியில் சீராங்குப்பம் சுடுகாடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நெய்வேலி: நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியில் உள்ள சீராங்குப்பம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டை சீராங்குப்பம் மற்றும் செங்கால்பாளையம் கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சுடுகாடு சாலை கடந்த ஒரு வருடமாக ஜல்லி மட்டும் போடப்பட்டு மற்ற பணிகள் நடைபெறாமல் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் இறுதி சடங்கு நேரத்தில்  பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  

மேலும் சாலை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மற்றும் சாலை பணி செய்யும் ஒப்பந்ததாரரிடம்  கூறியும் இதுவரையில் எவ்வித ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே கிடப்பில் கிடக்கும் சாலையை தார்சலை அமைக்கவில்லை என்றால் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: