கட்சி பெயருக்கு களங்கம்: இலங்கையில் ரணில் அரசில் 5 அமைச்சர்கள் திடீர் நீக்கம்

கொழும்பு: இலங்கையில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக 2 மூத்த அமைச்சர்கள் உட்பட 5 அமைச்சர்கள் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு நடை பெற்றது.

இந்நிலையில், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, விவசாயத்துறை அமைச்சர் அமரவீர மற்றும் 3 இணையமைச்சர்களை அதிபர் ரணில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். கட்சியின் மத்திய குழு முடிவுகளை மீறிய இவர்கள், அதற்கான விளக்கத்தை அளிக்கும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக, கட்சியின் பொது செயலாளர் தயா ஜெயசேகர தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் அதிபர் ரணில், 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் நிலையில், 5 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: