சென்னை : தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நியாயமாக நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி இருக்கிறர்கள். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், துணை தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க வருகின்ற ஜனவரி 19-ம் தேதி கடைசி நாள். தபாலில் அனுப்பப்படும் வாக்குகள் ஜனவரி 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 92,198 மருத்துவர்கள் மட்டும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.