பெரிய சக்கரம், கண் கூசும் விளக்கு ஜீப்பில் ‘கன்னாபின்னா’ மாற்றம் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை: ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தடாலடி

ஜம்மு:  பிரபல நிறுவனத்தின் ஜீப்பை தனது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்த உரிமையாளருக்கு ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் 6 மாதம் சிறை  தண்டனை விதித்துள்ளது. வாகன  விரும்பிகள் தாங்கள் வாங்கும் கார், பைக் போன்றவற்றை தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து ஓட்டுகின்றனர். இது அவர்களுக்கு ஒரு பேஷன். இது சட்டப்படி குற்றம் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. ஒவ்வொரு வாகனமும், அரசிடம் அனுமதி பெற்ற மாடலில் தயாரிக்கப்படுகின்றன. ஆர்சி புத்தகத்திலும்,

அதன் அடிப்படை வசதிகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த ஒரிஜினில் மாடலை மாற்றி விட்டு சிலர், பெரிய சக்கரங்கள், கண்களை கூச செய்யும் விளக்குகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்கள்,  பம்ப்பர்கள் போன்றவற்றை மாற்றி ஓட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரபல கார் நிறுவனத்தின் புதிய ஜீப், தற்போது அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இதை வாங்கிய ஒருவர், பெரிய சக்கரங்களை மாற்றினார். அதிக ஒலி எழுப்பும் சைரன்களையும்,  எல்இடி விளக்குகளையும் இணைத்தார்.

இது தொடர்பாக அவர் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988ன், 52வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம், ஜீப்பின் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.  இவர் முதல் முறையாக குற்றம் செய்திருப்பதால், 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை பத்திரமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு அவரின் நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், இந்த தொகை திருப்பி அளிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதி, இதை செய்யாவிட்டால் 6 மாதம் சிறைக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Related Stories: