ஜெகன் அண்ணா திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்-திருப்பதி ஆணையாளர் உறுதி

திருப்பதி : ஜெகன் அண்ணா திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று ஆணையாளர் அனுபமா அஞ்சலி உறுதி அளித்துள்ளார்.

திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் பொறியாளர்கள், வீட்டு வசதித்துறை அதிகாரிகள், வீடு கட்டும் ஒப்பந்ததாரர்களுடன் ஆணையர் அனுபமா அஞ்சலி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

ஜெகன் அண்ணா காலனி பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் முதல் கட்டமாக  5 லேஅவுட்டுகளிலும் நிறைவடைந்த வீடுகளில் உடனடியாக பயனாளிகள் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சந்திரகிரி அடுத்த எம்.கோட்டப்பள்ளி, ரேணிகுண்டா அடுத்த ஜி.பாலம், ஏர்பேடு அடுத்த சிந்தேபள்ளி, வடமலைப்பேட்டை அடுத்த கல்லூர், சூரப்பகாசம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் தகுதியானவர்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விளக்கி முன்வந்த பயனாளிகளுக்கு முதல்கட்டமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 5 லேஅவுட்டுகளில் வீடு கட்டும் பணி டிசம்பர் இறுதியில் அனைத்து பணிகளுக்கு தயாராக வேண்டும்.

ஒவ்வொரு வீடும் கட்ட அரசால் ₹1.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ₹30 ஆயிரம் துவாக்ரா சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் தனிநபர் கடனின் கீழ் முடிக்கப்படுகிறது.  மழையால் லேஅவுட்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால், பணிகள் தாமதமாகி வருகிறது. ஆனால், இந்த பிரச்னைகளை போக்க மாற்று நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் துணை கமிஷனர் சந்திரமவுலிஷ்வர், கண்காணிப்பு பொறியாளர் மோகன், நகராட்சி பொறியாளர்கள் சந்திரசேகர், வெங்கடராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: