வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயிலிருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வௌியேற்றம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயிலிருந்து மதகு வழியாக மற்ற கண்மாய் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வத்திராயிருப்பில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 5 ம் தேதி பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 153 கனஅடி தண்ணீரை பாசன கண்மாய்களுக்கு திறந்து விட்டார். இதனையடுத்து பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் கண்மாய்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதில் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய்க்கு அணையில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மதகு வழியே தண்ணீர் கண்மாய்களுக்கு வௌியேறிச்செல்கிறது. வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் 907 ஏக்கர் பாசன வசதி கொண்ட கண்மாயாகும். கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கு முன்பே விவசாய கிணறுகளில் இருக்கின்ற தண்ணீரை வைத்து விதை நெல் பாவி நாற்றை எடுத்து நெல் நடவு செய்து நெற்கதிர்கள் வளர்ந்து வருகின்றன. தற்போதுள்ள நிலைமையில் பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் உள்ளதால் நெல் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றன.

Related Stories: