அனைத்து மாநிலங்களும் நீட் பிஜி கலந்தாய்வை 16க்குள் முடிக்க உத்தரவு

புதுடெல்லி: நீட் பிஜி  மாணவர் சேர்க்கைக்கான 2வது சுற்று கவுன்சலிங்கை வரும் 16ம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (நீட் பிஜி) கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 2ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தரவரிசைப் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதால், மாணவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், இப்போது வரை கலந்தாய்வின் முதல் சுற்று மட்டுமே முடிந்துள்ளது. 2ம் சுற்று  முடியவில்லை.இதற்கிடையே, குறித்த காலத்துக்குள் நீட் பிஜி சேர்க்கையை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘நீட் பிஜி இரண்டாம் சுற்று கலந்தாய்வினை 16ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  உத்தரவிட்டார்.

Related Stories: