கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திண்டுக்கல்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும், அதிலும் தமிழை கற்க வேண்டும் என்றவர் காந்தி. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும். அவசர காலகட்டத்தில்தான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற பிரதமர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Related Stories: