கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுளளன. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் மிக முக்கியமானது பிரையன்ட் பூங்கா. இந்த பூங்காவில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை கருதி, 2 மாதங்களுக்கு முன்பு இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது. தற்போது இந்த பணி நிறைவடைந்தது.

பூங்காவில் ரூ.20 லட்சம் செலவில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பூங்காவை சுற்றி பார்க்கவும், சுற்றுலா பயணிகள் போல் வலம் வரும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும், இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாடு  அறை உள்ளது. தற்போது இந்த கேமராக்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பிரையன்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.

Related Stories: