குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் காட்வி

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு  டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால், இம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பில் ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. இக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத்தில் செல்வாக்கு அதிகமாகி வருகிறது. இதனால், இத்தேர்தலில் இக்கட்சி பாஜ.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், காங்கிரசும் இந்தமுறை ஆட்சியை கைப்பற்றி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் டிவி தொகுப்பாளர் இசுதன் காட்வியை கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், காட்வி (40) 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இவர், குஜராத்தின் துவாரகை மாவட்டத்தில் உள்ள பிபாலியாக கிராமத்தை சேர்ந்தவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்,’ என தெரிவித்தார்.

Related Stories: