எமர்ஜென்சி குறித்து சபாநாயகர் பேசியதற்கு ராகுல் அதிருப்தி

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது முதல் அமர்வின்போது எமர்ஜென்சி யை விமர்சிக்கும் வகையில் தீர்மானத்தை வாசித்தார்.  இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ‘‘ இந்தியா கூட்டணியை சேர்ந்த மற்ற தலைவர்களுடன் சபாநாயகர் ஒம் பிர்லாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

அப்போது நாங்கள் நாடாளுமன்றம் செயல்படுவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். எமர்ஜென்சி குறித்தும் பேசினோம், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல்காந்தி, சபாநாயகரிடம் இந்த விவகாரம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது தெளிவான அரசியல் மற்றும் சபாநாயகரின் குறிப்பில் இருந்து இது தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்” என்றார்.

வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘சபாநாயகர் பதவியேற்ற உடன் உங்கள் ஏற்புரைக்கு பின், அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த அவசர நிலை பிரகடனம் பற்றிய குறிப்பை வாசித்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறோம். நாடாளுமன்ற மரபுகளின் இந்த கேலிக்கூத்துக்கு ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எமர்ஜென்சி குறித்து சபாநாயகர் பேசியதற்கு ராகுல் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: