திருவண்ணாமலை கோயிலில் நவம்பர் 7-ம் தேதி பிற்பகல் 3 - 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் நவம்பர் 7-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வரும் 07.11.2022 மற்றும் 08.11.2022 பௌர்ணமி வரவிருப்பதால், 07.11.2022 அன்னாபிஷேகம்  நடைபெறுவதால், அன்று பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 06.00 வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6.00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேற்படி பௌர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: