‘மழை’ உலக கோப்பை: தெ.ஆப்ரிக்காவை வீழத்திய பாகிஸ்தான்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 ஆடவர் உலக கோப்பை தொடரில் நேற்று சூப்பர் - 12ன்  2வது பிரிவில் உள்ள பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற  பாகிஸ்தான் முதலில் களம் கண்டது. இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு வெற்றி பெற்ற பாகிஸ் தான்,வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து விளையாடியது. ஷதாப் கான் 20பந்துகளில் அரைசதம் அடித்து 52  (22 பந்து, 3பவுண்டரி, 4சிக்சர்), இப்திகார் அகமது 51(35பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்), முகமது ஹரிஸ் 28(11பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்), முகமது நவாஸ் 28(22பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்) விளாச பாக் 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185ரன் குவித்தது. தெ.ஆப்ரிக்கா  தரப்பில் நார்ட்ஜே 4 விக்கெட் அள்ளினார்.

அதனையடுத்து 186ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன தெ.ஆப்ரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா 36(19பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்), மார்க்ரம் 20(14பந்து, 4பவுண்டரி) மட்டும் கொஞ்சம் நேர போராடினர். காயமடைந்த டேவிட் மில்லருக்கு பதில் களமிறங்கிய கிளாஸ்ஸனும் ஏமாற்றமளித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 9வது ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்தது. அப்போது மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. மழை நின்றதும்  ஆட்டம் டக் வொர்த் லிவீஸ் முறையில் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கூடவே 142ரன் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. அப்போதே பாக் வெற்றி உறுதியாகி விட்டது. அதற்கேற்ப 14ஓவர் முடிவில் தெ.ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 108ரன் எடுத்தது. அதனால் பாக் 33ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. பாக் தரப்பில்  அப்ரிடி 3, ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறிய பாக்  அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Related Stories: