கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மொச்சை சாகுபடி தீவிரம்

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு வருசநாடு மயிலாடும்பாறை குமணன்தொழு கோம்பைத்தொழு தும்மக்குண்டு காந்திகிராமம் வாலிப்பாறை ஆளந்தளீர் நரியூத்து சிங்கராஜபுரம் முருக்கோடை போன்ற பகுதிகளில் 100 மேற்பட்ட விவசாயிகள் மானாவாரி நிலங்களில் மொச்சை சாகுபடி செய்வதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். வேளாண் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் வேளாண்மைதுறை தோட்டக்கலை துறை சார்பாக விவசாய அறிமுகக் கூட்டம் விவசாய விழிப்புணர்வு கூட்டம் போன்றவை நடத்தி வருகிறார்கள். இதில் மருந்து தெளிப்பது பற்றியும் உரம் இடுவது பற்றியும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மானாவாரி பயிர்களான மொச்சை பயிரிட்டு தற்போது களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய நிலங்களில் இடுகின்ற பயிர்களுக்கு அரசு அதிக அளவில் மானியங்கள் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும். எனவே அரசு மானியம் வழங்குவது குறித்து மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை வேண்டும் ’’ என்றனர்.

Related Stories: