சென்னையில் மழை, வெள்ளம் காரணமாக 2 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்த போதிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்காத தி.நகரில் சிறிதளவு கூட மழை தண்ணீரை பார்க்க முடியவில்லை. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் தற்போதையை நிலவரம் தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து  காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில்;

1.  மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-

* இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

* கணேசபுரம் சுரங்கப்பாதை

2.  மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது:-

* இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

* கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதும்  மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

3. மழைநீர் பெருக்குகாரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:-

* இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய  வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர்  ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய  வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4.  சாலையில் பள்ளம்:-

மாநகரபேருந்து  போக்குவரத்து  மாற்றம்:-

* அனைத்து உள்வரும் மாநகரபேருந்துகளும் பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் அம்பேத்கார் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம்,  பெரம்பூர் பாலம் வழியாக செல்கிறது.

* வெளிச்செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை  ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில், ஓட்டேரி, ஜமாலியா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

6.  மரங்கள் விழுந்து அகற்றும் பணி:-

* அபிராமபுரம் 3 வது தெரு, வாகனங்கள் மெதுவாக செல்கின்றது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: