சென்னை வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சென்னை: எதிர்வரும் மழைக் காலத்தை முன்னிட்டு, மழைநீர் எளிதாக வெளியேறும் வகையில்,  மழைநீர் வடிகால்வாய்ப் பணிகளை, போர்க்கால அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.  பகல் நேரத்தில் இப்பணிகளை மேற்கொண்டால், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு 10 மணிக்குமேல்தான் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், இரவு நேரங்களில் இப்பணிகளை ஆய்வு செய்துள்ளது கூட செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், 27.10.2022 தேதிய Times of India என்ற ஆங்கில நாளிதழில், பல நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டப் படத்தை வெளியிட்டு, மழைநீர் வடிகால்வாய்ப் பணிகள் முடிக்கப்படாததைப்போலவும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் இரவு-பகல் பாராமல் மழைநீர் வடிகால்வாய்ப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது, வால்டாக்ஸ் சாலையில் ஆங்கில நாளிதழில் குறிப்பிட்ட மழைநீர் வடிகால்வாய்ப் பணிகள் முன்னரே நிறைவடைந்து விட்டது.  அவற்றின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு, பொது மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். வால்டாக்ஸ் சாலையில், மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் ஒவ்வொன்றாக முடிவுப்பெற்று வருகிறது என்றும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories: