தீபாவளி தொடர் விடுமுறையால் ஊட்டி சுற்றுலா தலங்களை முற்றுகையிட்ட பயணிகள்

ஊட்டி :  தீபாவளி பண்டிைக விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை முற்றுகையிட்டனர்.

நீலகிரி  மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. ஊட்டிக்கு நாள்  தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், பண்டிகை மற்றும் அரசு  விடுமுறை நாட்களில் அதிகளவு வருவது வழக்கமாக உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்  தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி நகரில் உள்ள  ஓட்டல்கள், காட்டேஜ்களில் அனைத்து அறைகளும் நிரம்பின.தீபாவளி பண்டிகை  நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுைறயை  முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

இதனால் ஊட்டி அரசு  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில்  கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பள்ளி,  கல்லூரிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று  சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு  கடந்த சனிக்கிழமையன்று 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுகிழமையன்று 12 ஆயிரத்து  761 பேரும், தீபாவளி தினத்தன்று 17 ஆயிரத்து 722 பேர் வந்து சென்றுள்ளனர்.  நேற்றைய தினம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என மொத்தம் 43 ஆயிரத்து 500  பேர் வருகை தந்தனர்.

Related Stories: