தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும்: வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிவித்துள்ளார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.29,30 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

அக்டோபர் 29,30 தேதிகளில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனியில் கனமழை பெய்யக்கூடும். தொடர்ந்து, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர் 29ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, மதுரை, தேனியில் அக்டோபர் 30ல் கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அக்.30ல் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

அக்.30ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: