தீபாவளி பண்டிகையொட்டி பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

வேலூர்: தீபாவளி பண்டிகையொட்டி பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டு சந்தை விற்பனை களைக்கட்டியது. இன்று வழக்கம் போல் பொய்கை மாட்டுச்சந்தை செயல்பட்டது. ஆனால் வழக்கத்தை விட மாடுகள் குறைவாக இருந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகை மற்றும் சூரிய கிரகணம் என்பதால் இன்று பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்தது. அடுத்த வாரத்தில் கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: