நீரிழிவு, புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த கர்நாடக துணை சபாநாயகர் மரணம்: பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல்

பெங்களூரு: நீரிழிவு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக  சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபை துணை சபாநாயகரும், சவடத்தி தொகுதி எம்எல்ஏவுமான ஆனந்த் மாமணி (56), கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். நீரிழிவு மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேல் சிகிச்சைக்காக மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஓரளவு குணமடைந்த நிலையில், மீண்டும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக கோமா நிலையில் இருந்த ஆனந்த் மாமணி, நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் வந்து மறைந்த ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மூன்று முறை பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஆனந்த் மாமணி, உடல் நலக்குறைவால் இறந்ததால் அக்கட்சியினர் சோகத்தில் உள்ளனர். ஆனந்த் மாமணி மறைவுக்கு முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்களல், ெபாதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவரது தொகுதியான சவடத்தியில் இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: