மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை தயாரிக்க கிரிக்கெட் வீரர் தோனி முடிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது, திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தோனி தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.
