மதுரை சிறைக்காவலர் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் குழு விசாரிக்க டிஐஜி உத்தரவு

மதுரை:  மதுரை மத்திய சிறைக்காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் குழு விசாரிக்க டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் 2006ல் சிறைக்காவலராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள், சிறை நிர்வாகம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதால், இருமுறை துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். பின் மீண்டும் பணியில் சேர்ந்தார். கொடைக்கானல் கிளைச்சிறையில் சரிவர பணிக்கு வராமல் இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன் மதுரை சிறைக்கு இடம் மாற்றப்பட்டார்.

அங்கு சென்ற அறிவழகன், திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூற, உடனடியாக சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் கம்பி ஒன்றை காட்டி, ‘‘இதை குத்திக் கொண்டு என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுவேன்’’ என கண்காணிப்பாளரை மிரட்டியதாக தெரிகிறது. அவரை சக காவலர்கள், அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதுகுறித்து விசாரிக்க டிஐஜி பழனி உத்தரவிட்டுள்ளார். அன்படி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: