கிருஷ்ணர் ஜெயந்தியில் பிறந்த நான் கம்சன் வம்சத்தை ஒழித்து கட்டுவேன்: குஜராத்தில் கெஜ்ரிவால் சூளுரை

வதோதரா: ‘கிருஷ்ணர் ஜெயந்தியில் பிறந்த நான், அரக்கன் கம்சனின் வம்சத்தை ஒழித்து கட்டுவேன்,’ என்று ஆவேசமாக கூறினார். டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பல ஆயிரம் பேர் இந்துவில் இருந்து புத்த மதத்துக்கு மாறினர். இதில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கவுதமும் பங்கேற்று, இந்து மத கடவுள்களை வழிபட மாட்டேன் என்று சபதம் செய்தார். இந்த வீடியோ  வைரலானதால், கெஜ்ரிவாலை  பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது. ‘இந்துக்களின் விரோதி’ என்ற அவரை கூறி வரும் பாஜ, குஜராத் முழுவதும் இந்த வாசகம் அடங்கிய பேனர்களை வைத்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘என்னை இந்துக்களின் விரோதியாக பாஜ காட்டி வருகிறது. அது பற்றி எனக்கு கவலையில்லை. கிருஷ்ணர் ஜெயந்தியில் பிறந்த நான், அரக்கன் கம்சனின் வம்சத்தை (பாஜ) ஒழித்து கட்டுவேன்.  என் மீதான வெறுப்புணர்வு காரணமாக, இந்து கடவுள்களையும் பாஜ அவமதிக்கிறது,’ என தெரிவித்தார். மேலும், தனது பேச்சை முடிக்கும் போது, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்றும் கோஷமிட்டார்.

Related Stories: