பெண்ணிடம் 4 சவரன் பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே  வேதப்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (43). இவரது மனைவி சுப்புலட்சுமி (41). இவர்  கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தனியார் பள்ளி அருகே இவரது கம்மல் கீழே விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக, சுப்புலட்சுமி டூவீலரை நிறுத்திவிட்டு, கம்மலை எடுத்தார். அப்போது, தலைக்கவசம் அனிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர்.

இதுகுறித்து சுப்புலட்சுமி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு அருகே தனியார் பள்ளி சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, செயின்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: