ஆகாஷ் ஏர்லைன்சில் நாய், பூனைகளையும் கூட்டிட்டு போகலாம்: அக்.15 முதல் முன்பதிவு

புதுடெல்லி: ஆகாஷ் ஏர்லைன்சில் நவம்பர் 1 முதல், செல்ல பிராணிகளை எடுத்து செல்லலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஆகாஷ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது முதல் விமான சேவையை தொடங்கியது. 2 மாதங்கள் முடிந்த நிலையில், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் நிருபர்களிடம் கூறியதாவது: 2023ம் ஆண்டு 2ம் பாதியில் சர்வதேச சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் 60 நாட்களில் விமான நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. நாளை (இன்று) முதல் டெல்லியில் இருந்து சேவைகளைத் தொடங்க உள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விமான சேவை  விரிவுபடுத்தப்படும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட செல்ல பிராணிகளை கேபினிலும், சரக்கு பிரிவிலும்  நவம்பர் 1ம் தேதி முதல் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். இது தொடர்பான முன்பதிவுகள் வரும் 15 முதல் தொடங்கும். 100 கிலோ வரையிலான செல்ல பிராணிகளை எடுத்து செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: