800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கறம்பக்குடி சிவன் கோயில் ஊரணி ரூ.1.04 கோடியில் புனரமைப்பு: திமுக அரசின் நடவடிக்கைக்கு பக்தர்கள் பாராட்டு

கறம்பக்குடி: கறம்பக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் குளம் ஊரணி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி ரூ.1,04,50,000 மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி நடைபெற காரணமான திமுக அரசுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியானது திமுக ஆட்சி காலத்தில் தாலுகா உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கறம்பக்குடி தாலுகாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியாக 15 வார்டுகளை உள்ளடக்கி சிறப்பாட செயல்பட்டு வருகிறது.

கறம்பக்குடியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. கறம்பக்குடி வளர்ச்சி அடைந்து வரும் நகற்புற பகுதியாகவும். பேரூராட்சி பகுதியாகவும் விளங்கி வருகிறது. கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மிகவும் பிரசித்து பெற்ற முத்து கருப்பையா சுவாமி கோயில் பின்புறம் மிகவும் பழமை வாய்ந்த சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயிலில், அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் இஷ்ட தெய்வமாக  அனந்தேஸ்வரர் முடையார் உடனுறை  மங்காலாம்பிகை பெயர் கொண்ட சிவன் சேவை சாதித்து வருகிறார். மிகவும் பழைமை வாய்ந்த இந்த சிவன் கோயில் புதுக்கோட்டை மாவட்ட அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் சுமார் 30 வருடங்களுக்கு முன் பங்குனி மாதம் பங்குனி உத்திரம் போன்ற காலங்களில் கோயில் கரைகாரர்கள், பொதுமக்கள் மூலம் தினம்தோறும் கோயிலில் உள்ள அம்மனுக்கு மண்டகபடிகள் நடைபெற்று, கோயில் வளாகத்தில் இருந்து ஸ்வாமிகள் வீதி உலா கட்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த சிவன் கோயிலானது தற்போது சிதிலமடைந்து சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் ஏடு ஏடாக பெயர்ந்து வருகிறது. முன் பகுதியில் உள்ள சிவன் கோயில் கோபுரம் சிதிலமடைந்து திரிசனம் செய்ய வருவோரை வேதனையடைய செய்கிறது. இருப்பினும் இக்கோயிலில் தினம்தோறும் விளக்கு ஏற்றி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் பளுடைந்த மிகவும் பழைமை வாய்ந்த பிரசித்து பெற்ற சிவன் கோயிலையும், கோயில் எதிரே உள்ள கோயில் குலத்தையும் சீரமைக்க வேண்டும் என்று கரைகாரர்கள் மற்றும் கறம்பக்குடி பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காக எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மேம்பாட்டு பணிகள் செய்வதற்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிதாக தேர்ந்தெடுக்க பட்ட பேரூராட்சி திமுக நிர்வாகம் உடனே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அரசுக்கும்,

துறை சார்ந்த நிர்வாகத்திற்கும் பேரூராட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்து, உடனடியாக திமுக அரசும் சம்மந்தப்பட்ட நிர்வாகமும் 2022 -23ம் ஆண்டிற்கான கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கறம்பக்குடி சிவன் கோயில் ஊரணியை புனரமைப்பு செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகமும், அரசும் கறம்பக்குடி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்கும் வகையில் ரூ.1,04,50,000 (ஒரு கோடியே நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) நிதி ஒதுக்கீடு செய்து சிவன் கோயில் எதிரே உள்ள கோயில் புனித குளம் சீரமைப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கோயில் குளத்தை சீரமைக்கும் பணி, குளத்தை ஆழப்படுத்தி அகல படுத்துதல் பணியும், மேலும் கோயில் குளத்தை சுற்றி 4 படித்துறைகளும், குளத்தை சுற்றி நடைப்பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பேவர் பிளாக் கல் அமைத்தல், சோலார் மின்விளக்குகள் அமைத்தல்,

குளத்திற்கு புனித நீராட வரும் பக்தர்கள் வசதியாக அமருவதற்கு இருக்கைகள் மற்றும் கேமராக்கள் அமைப்பதற்கு போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருவதற்காக கலைஞர் நகற்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கறம்பக்குடி சிவன் கோயில் சீரமைக்கும் மேம்பாடு செய்யும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வேலைகள் சீறமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாகவே வைக்கப்பட்ட கறம்பக்குடி பகுதி அணைத்து தரப்பு பொது மக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும், பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கும் பொது மக்கள் பக்தர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

கோயில் புனரமைப்பு

திமுக அரசும், சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகமும் சிவன் கோயில் குளத்தை சீறமைப்பு பணியில் ஈடுபடுவது போல் கறம்பக்குடியில் மிகவும் பழைமை வாய்ந்த சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, தற்போது அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிவன் கோயிலையும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: