உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சு அமைதி பேச்சு நடத்த இந்தியா உதவ தயார்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய 4 பகுதிகளை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் போனில் பேசினார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போரின் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. தூதரகங்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. அதே நேரம், மோடியுடன் பேசியது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், ‘மனிதாபிமான முறையில் உக்ரைன் மக்களுக்குச் இந்தியா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி. அதே நேரம், ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை இணைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதனால், பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை,’ என தெரிவித்தார்.

Related Stories: