உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் பலி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி, மலையேறும் பயிற்சி பெறும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர், மேலும் 11 பேரை காணவில்லை. அவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில்  திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் உள்ளது. நேற்று மலையேறும் பயிற்சி செய்யும் 29 பேர் இந்த மலை சிகரத்தில் ஏறினர். காலை 9 மணியளரில் யாரும் எதிர்பார்காத சூழ்நிலையில் மிக பெரிய அளவில் பனிச் சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். 8 பேரை மீட்பு படையினர் மீட்டனர். 11 பேரை காணவில்லை. பனிச் சரிவில் சிக்கிய 11 போரையும் மீட்கும் முயற்சியில்  தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளர். மீட்பு பணியில் இந்திய விமான படையினரும் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்கு 2 சீத்தா ரக ஹெலிகாப்டர்களை விமான படையினர் ஈடுபடுத்தியுள்ளனர். பனி சரிவில் சிக்கிய அனைவரும் நேரு மலையேறும் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்று வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மலையேறும் பயிற்சியாளர்களில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் 13,000 அடியில் உள்ள ஹெலிபேட் அமைந்து இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு உத்தராகண்ட்  தலைநகர் டேராடூன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக உத்தராகண்ட்  முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த 10 பேரையும் சேர்த்து கடந்த ஓராண்டில் உத்தரகாண்டில் மொத்தம் 30 பேர் பனி சரிவு காரணமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: