போலிகளை எளிதில் கண்டறிய மருந்து பொருட்களில் விரைவில் க்யூஆர் கோடு: விலை அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையிலும், போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருள்களின் லேபிள்கள் மீது பார்கோடு அல்லது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட இருக்கிறது.

இந்த க்யூஆர் கோடை, செல்போனில் ஸ்கேன் செய்து, மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, தயாரித்த நிறுவனம், விலை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். முதலில், ஆன்டிபாடி மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, தொற்றுக்கு எதிரான நோய்கள் போன்றவை ஒரு மாத்திரை அட்டையின் விலை ரூ.100க்கு மேல் இருக்கும் மருந்துகளுக்கும் இந்த வசதி அறிமுகமாகிறது. இந்த நடவடிக்கை மூலம், மருந்துகளின் விலை 3-4 சதவீதம் அதிகரிக்கலாம் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: