விவசாயிகள் போராட்டம் லக்கிம்பூர் கொலை: ஓராண்டு நிறைவு

பக்வாரா: லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கக்கோரி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.  உத்தரப் பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, உபி மாநிலம் லக்கிம்பூரில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, ஒரு கார் போராட்ட  கூட்டத்தில் புகுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின் ஏற்பட்ட  வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தில் நுழைந்த கார் ஒன்றிய அமைச்சர்  அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமானது என்பதும், விபத்து  நடந்தபோது அவர் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி  எழுப்பிய பின் அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, பாரதி கிசான் யூனியன் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட் டம் நடத்தினர்.

Related Stories: