சினிமாவில் ரோஜா மகள்?

ஐதராபாத்: நடிகை ரோஜா மகள் நடிக்க வருவதாக டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜாவுக்கு அன்ஷுமாலிகா என்ற மகள் இருக்கிறார். இவர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆவப்போவதாக முன்பே தகவல் பரவியது. இந்நிலையில் தெலுங்கு படத்தில் அன்ஷுமாலிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகின.

இது பற்றி ரோஜாவின் கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறும்போது, ‘மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதே என் மகள் அன்ஷுமாலிகாவின் எண்ணம். அன்ஷுமாலிகா தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நான்கு ஆண்டுகள் அவர் அமெரிக்காவில் இருப்பார். அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை’ என்றார்.

Related Stories: