மும்பை: ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் படம், ‘காந்தி டாக்ஸ்’. இது வசனம் இல்லாத மவுன படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த்சாமி, சித்தார்த் ஜாதவ் நடித் துள்ளனர். விஜய் சேது பதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது அவர் கள் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இது மவுன படம் என்பதால், அனைத்து மொழியிலும் வெளியிடுகின்றனர். கிஷோர் பி.பெலேகர் இயக்கியுள்ளார். அவர் கூறியதாவது: