சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் இதன் நோக்கமாகும். சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்  ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்தவித மாற்றமில்லாமல் நீடிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: