பீகாரில் பிரசாந்த் கிஷோர் இன்று பாதயாத்திரை

பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் இன்று தனது பாதயாத்திரையை துவக்குகிறார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக இருந்து, பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தேர்தல் வியூக நிபுணராக தொடர்ந்து செயல்பட்டு வந்த அவர் சமீபத்தில் அப்பணியிலிருந்து விலகி, மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி இன்று பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் பாத யாத்திரையை அவர் துவங்க உள்ளார்.  3 ஆயிரத்து 500 கிமீ   நடைபயணம் செல்ல உள்ளார். ஜன சுராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் பல தரப்பு மக்களையும் அவர் சந்திக்க உள்ளார்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில்  தற்போது பிரசாந்த் கிஷோரும் பாதயாத்திரை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: