கேரளாவில் வணிக வளாகத்தில் இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபரின் கன்னத்தில் பளார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மாலில் நடந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் 2 பேரிடம்  சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் மலையாளத்தில் வெளியான ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள மாலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், இந்த சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை பார்க்க, ரசிகர்கள் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து 2 நடிகைகளும் திரும்பியபோது, சிலர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நடிகை வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் ‘நிகழ்ச்சிக்கு பிறகு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். எனது உடலில் எந்த இடத்தில் அந்த நபர் தொட்டார் என்பதை விவரிக்க முடியாது. சில அதிர்ச்சியில் உறைந்தேன். ஆனால், என்னுடன் வந்த நடிகை, அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். நம்மை சுற்றிலும் இவ்வளவு மோசமான நபர்களா உள்ளனர்?’ என்று கூறியுள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் எதுவும் செய்யவில்லை. ஆனாலும், பேஸ்புக் பதிவின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: