மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் தெருநாய்களை கொல்ல அனுமதி தர வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

திருவனந்தபுரம்: மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர்.

இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்கள் கடித்து 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தெரு நாய்களும் கொல்லப்படும் சூழல் நிலவுகிறது.

Related Stories: