உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தத்தா பரிந்துரை

புதுடெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி தீபன்கர் தத்தா கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி நியமிக்கப்பட்டார். 2020ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இந்நிலையில், தீபன்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடந்த கொலிஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34. தற்போது 29 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

Related Stories: