தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தல் விருப்ப மனு பரிசீலனை துவங்கியது

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களின் மனுக்களின் பரிசீலனை நேற்று தொடங்கியது. பரிசீலனை முடிந்ததும் மாவட்ட அமைப்புகளுக்கான தகுதியுள்ளவர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கும். அதன் பின்னர் போட்டியிருக்கும் மாவட்டங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெறும். இந்த மாதம் இறுதிக்குள் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும். அதன் பிறகு திமுக பொதுக்குழு கூட்டப்படும்.  அப்போது புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொள்வார்கள்.

Related Stories: