புனித நகரமான மதீனாவில் புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு: சவுதி ஆய்வு மையம் தகவல்

மதீனா: புனித நகரமான மதீனாவில் அதிக அளவில் தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் 5 ஆயிரத்து 300 சுரங்கங்கள் உள்ளன.  தங்கம், செம்பு உள்ளிட்ட உலோகங்கள், உலோகம் அல்லாதவை, இரும்பு உள்ளிட்ட  தாதுப் பொருட்களும் சுரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் சவுதி அரேபியா அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மதீனாவின் அருகாமையில் உள்ள அபா-அல்-ரஹா எல்லையில் தங்கம் மற்றும் செம்பு கற்களால் ஆன பெரிய சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், அல் மடிக், அல் ஃபரா, மதீனா ஆகிய இடங்களிலும் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கங்கள் கண்டுபிடிப்பால் சவுதி அரேபியா மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கவர முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: