ஒற்றுமை நடைபயணம் இன்று மாலை தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை.!

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளார். சென்னை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோதா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.

ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 3,570 கி.மீ. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் பொதுமக்களுடன் பங்கேற்றுள்ளார்.

Related Stories: