நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு பாடல்; பேரூராட்சி உதவி இயக்குனர் அசத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான இயக்கம் என்ற பெயரில் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ச.கண்ணன்  இந்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதி அதனை பாடவும் செய்து தூய்மைப் பணியாளர்களின் நடனத்தோடு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில், `சொல்லப்போகும் வார்த்தையை கொஞ்சம் கேளுங்க அம்மா... நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும்.. அதற்கு சுத்தம் வேண்டும் என உணர வேண்டும்... குப்பைகளை வெளியிடங்களில் போடாமல்... அதனை தினசரி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்...  துணி பைகள் சுகாதாரத்தின் அடையாளம்...  நெகிழி பைகளுக்கு போடு கடிவாளம்... குப்பைகளை தரம் பிரித்து தந்தாலே.... நம் நகரம் தூய்மையாகும், தன்னாலே என்று நம்மையும், நம்மை சுற்றியும் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி’ என்பது குறித்து ஐந்தரை நிமிடம் வரை வருகிறது.

Related Stories: