ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயத்தில் கும்பாபிஷேக விழா; வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகர் விரிவாக்கம் குமரவேல் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 8ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதை வழிபாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து பூர்ணா ஹூதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சாய்பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட‌ உள்ளது. மேலும் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, மிருத்சங்கரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜை, சுவாமிக்கு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து விஷேசசந்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதியும், தீபாராதனையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடும் விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து மூலவர் சாய் பாபாவிற்கு கும்பாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் மற்றும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த கும்பாபிஷேக விழாவில் சக்கரவர்த்தி சாய் ஸ்ரீ  பரசுராம் குருஜீ கலந்து கொள்கிறார். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: